Breaking News

15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்! காவல் நிலையங்கள் பட்டியல் இணைப்பு

NEWS COVER
0

சென்னை வடக்கு மண்டலத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ஐஎஸ்ஓ சான்றை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பெற்றுக்கொண்டார்.



சென்னையில் காவல் நிலைய உட்கட்டமைப்புகள் சிறப்பாக வடி வமைக்கப்பட்டு, புகார்தாரர்களி டம் கனிவுடனும், மனித நேயத் துடனும் குறைகளைக் கேட்டு உரிய நிவாரணம் பெற்றுத்தருவது, காவல் நிலையத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைப்பது, சிறந்த பணிச்சூழலை உருவாக்கு வது, திறன் மேம்பாடு, தொழில் முறை காவல் பணிகளை உறுதி செய்வது, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ள 15 காவல் நிலையங்களை தணிக்கை செய்து, இந்திய அரசின் தரக் கவுன்சில் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழை வழங்கி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையர் ஜெ.லோக அதன்படி, நாதன், இணை ஆணையர்  ஆர்.வி.ரம்யா பாரதி பங்கேற்றனர்.

வண்ணாரப் பேட்டை, 

தண்டையார்பேட்டை,

புதுவண்ணாரப்பேட்டை,

திருவொற்றியூர், 

ராயபுரம், 

காசிமேடு, 

யானைக்கவுனி, 

ஏழுகிணறு, 

வடக்கு கடற்கரை, 

முத்தியால் பேட்டை, 

புளியந்தோப்பு, 

பேசின் பாலம், 

எம்கேபி நகர், 

கொடுங்கையூர், 

செம்பியம் ஆகிய 15 காவல் நிலையங்களுக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு, அரசு அங்கீகாரம் பெற்ற குவெஸ்ட் சர்ட்டிபிகேஷன் நிறு வனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.கார்த்திக்கேயனிடம் இருந்து, தரச் சான்றிதழைப் பெற் றுக்கொண்டார்.

Tags: தமிழக செய்திகள்