Breaking News

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூலை. 20ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

NEWS COVER
0

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூலை. 20ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 



செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூலை.20ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் ஜூலை 20ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். இம்முகாமானது காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் கலந்து கொள்ள வருபவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/342307060004

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்