இன்று ஒரே நாளில் திரைக்கு வரும் 9 தமிழ் படங்கள்! எந்த எந்த படங்கள் முழு விபரம்
ஒரே நாளில் திரைக்கு வரும் 9 தமிழ் படங்கள்!
GET NEWS COVER
சந்தானத்தின் DD RETURNS திரைப்படம்
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் , சுரபி ,ரெட்டின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் ஷங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆர்கே என்டர்டைன்மென்ட் சார்பில் C.ரமேஷ் குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்க்கு OFRO இசை அமைத்திருக்கிறார்.
ஹரிஷ் கல்யாணின் LGM திரைப்படம்
தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண், இவானா, நதியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்க்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார்
பரத்தின் LOVE திரைப்படம்
நடிகர் பரத்தின் ஐம்பதாவது திரைப்படம் லவ் இந்த திரைப்படத்ல் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.மலையாளத்தில் புலி முருகன், லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றிய ஆர்.பி பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்ற லவ் படத்தின் தமிழ் ரீமிக்கை தயாரித்து இயக்கியுள்ளார் ஆர்.பி.பாலா. இந்தப் படத்திற்கு ரோனி ரஃபேல் இசை அமைத்துள்ளார்
அஸ்வினின் PIZZA-3 திரைப்படம்
அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில்நடிகர் அஷ்வின் ஹீரோவாக நடித்துள்ளார்.இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார்.இவர்களுடன் காளி வெங்கட், இயக்குனர் கவுரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உதய் கார்த்திக்கின் DINOSAURS திரைப்படம்
அறிமுக இயக்குநர் எம். ஆர். மாதவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இதில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய் பிரியா தேவா, ஜானகி சுரேஷ், யாமினி சந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ ஷசி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை கேலக்ஸி பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்திருக்கிறார்.
TERROR,
ஜெய் ஆகாஷ் நடிப்பில் யோக்கியன் திரைப்படம்
மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி மற்றும் , சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தபடம் முதல் முறையாக தியேட்டர் மற்றும் ஒடிடியில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகின்றது
அறுமுடைத்த கொம்பு திரைப்படம்
ஜாக்சன் ராஜ் இயக்கத்தில் ஏகே ஆனந்த், ஜெசி ரத்னவதி, ரெஜி, சிந்து, டிகேஎஸ் சண்முக சுந்தரம், சிம்சன் தேவராஜ், வினோத் சிங், சதா, ஜாவா கார்த்திக் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “அறமுடைத்த கொம்பு”
மேல இருக்குறவன் பாத்துக்குவான் திரைப்படம்
யு.கவிராஜ் இயக்கத்தில் ஆரி நடிக்கும் அறிவியல்-புனைவு திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எ.முகமத் அபூபக்கர் தயாரிக்க, இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சர்ய இசையமைத்துள்ளார்.
ஆகிய 9 தமிழ் படங்கள் இன்று (ஜூலை 28) திரையரங்குகளில் வெளியாகிறது!
Tags: சினிமா