Breaking News

சிவகங்கை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு

NEWS COVER
0

 சிவகங்கை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு


GET NEWS COVER

சிவகங்கை அருகே பெரியகோட்டையில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் இன்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் சென்றது. அப்போது திடிரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7-ம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் (13) உடல் நசுங்கி உயிரிழந்தார் மேலும் வாகனத்தில் இருந்த சுமார்15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி குழந்தைகளுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்