பரத் வானி போஜன் நடிப்பில் லவ் திரைபடம் திரைவிமர்சனம்.
நடிகர்கள்:-
பரத்
வாணி போஜன்
விவேக் பிரசன்னா
பிக் பாஸ் டானி
ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்
இயக்கம்:-
ஆர்.பி.பாலா.
இசை:-
ரோனி ரபேல்
தயாரிப்பு:-
ஆர்.பி.பிலிம்ஸ்
கதை:-
காலித் ரஹ்மான் இயக்கத்தில் 2020ல் நேரடி நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸான மலையாள சினிமா `லவ்'ன் தமிழ் ரீமேக் தான் இந்த படம்
பரத் - வாணி போஜன் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போக திருமணம் நடக்கிறது. ஆரம்பத்தில் மகிழ்சியாக ஆரம்பிக்கும் குடும்ப வாழ்க்கையில் ஒரு வருடத்திற்குப் பிறகு அடிக்கடி சண்டைகள் நடக்கின்றது
பிசினஸ் செய்கிறேன் என கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார் பரத் ஆரம்பத்தில் கணவரை சகித்துக் கொண்டு வாழும் திவ்யா, ஒருகட்டத்தில் அவரை விட்டு பிரிய நினைக்கிறார். அப்போது ஏற்படும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆகிறது. இதில் பரத்தின் கோபத்தினால் வாணிபோஜன் கொல்லப்படுகிறார். பரத் வானிபோஜன் உடலை பாத்ரூமில் மறைத்து வைக்கின்றார். பரத் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.
.அப்போது அந்த வீட்டுக்குள் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக குழப்பத்தில் இருக்கும் நண்பர் விவேக் பிரசன்னா வருகிறார்.
அடுத்த சிறிது நேரத்தில் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருக்கும் பிக்பாஸ் டேனியும் வருகிறார்.
அப்போது வாணிபோஜனின் அப்பா ராதாரவியும் வருகின்றார். ஒரு சந்தர்ப்பத்தில் விவேக் பிரசன்னா, டேனி இருவருக்கும் உண்மை தெரிய வருகிறது. உடலை எப்படி அப்புறப்படுத்துவது என யோசிக்கிறார்கள். அப்போது மீண்டும் கதவின் பெல் அடிக்கப்படுகிறது. திறந்து பார்த்தால் அங்கு வாணி போஜன் நிற்கிறார்.அதன் பின்பு என்ன நடக்கின்றது என்பது தான் கதை
Tags: சினிமா