Breaking News

தென்காசி மாவட்டத்தில் நாளை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

NEWS COVER
0

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 21 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.


GET NEWS COVER

இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

முகாம் நடைபெறும் இடம் :

முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் ஷோரூம் பின்புறம்) குத்துக்கல்வலசை அஞ்சல் தென்காசி - 627803.

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்