சதுரகிரிக்குச் செல்ல பக்தா்களுக்கு ஆக.12 முதல் ஆக.17 வரை 6 நாள்கள் அனுமதி
ஆடி மாத அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாள்களுக்கு அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சதுரகிரி மலை அருகே சாப்டூா் வனச் சரகம் 5-ஆவது 'பீட்' ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோயில் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலையில் காட்டுத் தீ ஏற்பட்டது. சுமாா் 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போதிலும், பலத்த காற்று வீசி வருவதால் தீ பரவி வருகிறது. இதனால், பக்தா்களின் பாதுகாப்புக் கருதி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது
இந்த நிலையில் ஆடி மாத அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாள்களுக்கு அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. சனிக்கிழமை (ஆக.12) முதல் வியாழக்கிழமை (ஆக.17) ஆறு நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.
Tags: தமிழக செய்திகள்