Breaking News

நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய இடம் சிவ சக்தி என அழைக்கப்படும் பிரதமர் மோடி அறிவிப்பு

NEWS COVER
0

நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய இடம் சிவ சக்தி என அழைக்கப்படும் மேலும் தரையிறங்கிய நாள் ஆகஸ்ட் 23 -ம் தேதி ‘தேசிய விண்வெளி தினம்’  என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 26) அறிவித்தார்.




பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் & கமாண்ட் நெட்வொர்க் மிஷன் கண்ட்ரோல் வளாகத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி  அங்கு சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இப்போது நிலவில். நமது தேசிய பெருமை நிலவில் வைக்கப்பட்டுள்ளது. 2019-ல் சந்திரனின் மேற்பரப்பில் சந்திரயான் -2 அதன் கால்தடங்களை விட்டுச் சென்ற இடத்திற்கு ‘திரங்கா’ பாயிண்ட் எனப் பெயரிட்டார். தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு என்பதை அந்த இடம் என்றென்றும் நினைவூட்டும் என்றும் மேலும்  இது சாதாரண சாதனையல்ல; இது எல்லையற்ற பிரபஞ்சத்தில் இந்தியாவின் அறிவியல் சாதனைக்கான ஒரு கர்ஜனை அறிவிப்பு… இந்தியர்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள அறிவியலில் நம்பிக்கை கொண்ட மக்களும் உற்சாகத்தில் உள்ளனர் என்றார்

மேலும் இந்திய விஞ்ஞானிகளை உலகமே வியந்து பார்க்கிறது. நிலவில் யாரும் செய்யாத சாதனையை நாம் அனைவரும் இணைந்து போராடி சாதித்துள்ளோம். சுதந்திர இந்தியாவின் அடையாளமான அசோக சின்னம் நிலவில் பதிக்கப்பட்டு வருகிறது.

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை சிவ சக்தி என்று அழைப்போம். இமயம் முதல் குமரி வரை இந்தியாவை இணைக்கும் தாரக மந்திரமாக சிவ சக்தி உள்ளது. பூமி என்பது பெண் சக்தியின் அடையளமாக திகழ்கிறது. சந்திரயான் -3 திட்டத்தில் பெண்கள் பங்களிப்பு அதிகம் உள்ளதால், சிவ சக்தி என்று அழைப்பதே சால சிறந்ததாகும்.

அதேபோல் நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தடம் பதித்த ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடுவோம். என்று கூறினார்.

Tags: தேசிய செய்திகள்