4 வயது சிறுவன் தலையில் சிக்கிய பாத்திரம்! மொபைலில் ரைம்ஸ் பார்க்க வைத்து பாத்திரத்தை அகற்றிய தீயனைப்பு வீரர்கள்! வைரல் வீடியோ...
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நான்கு வயது சிறுவன் தலையில் மாட்டிக்கொண்ட எவர்சில்வர் பாத்திரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றிய வீடியோ இணையத்தில் வைரல்
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அடுத்த அணைத்தலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ். இவரது மகன் சேவியர் (4). சிறுவன் வழக்கம்போல் இரவு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டில் இருந்த ஒரு பாத்திரத்தை எடுத்து தலையில் மாட்டியுள்ளார். அந்த பாத்திரம் தலையில் இருந்து எடுக்க முடியவில்லை
அக்கம் பக்கத்தினரும் பெற்றோரும் பாத்திரத்தை எடுக்க போராடியும் பாத்திரத்தை தலையில் இருந்து எடுக்க முடியவில்லை உடனடியாக சிறுவனை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், சிறுவனின் தலையில் சிக்கி இருந்த பாத்திரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
அப்போது சிறுவனின் கவனத்தை திசை திருப்ப அவனுக்கு பிடித்தமான ரைம்ஸை மொபைல் போனில் வைத்துக்கொடுத்து பாத்திரத்தை எடுத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/thinak_/status/1686285612075352064
Tags: தமிழக செய்திகள்