சிறப்பாக பணியாற்றிய 6 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விருது! முழு விவரம்.
.நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ந்தேதி 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்ச்சியில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் சிறப்பாக பணியாற்றிய 6 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழக அரசால் காவல்துறையினருக்கு வழங்ப்படும் முதலமைச்சர் காவல் விருது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ள்ளது.
வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க்,
கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன்,
தேனி மாவட்ட எஸ்பி டோங்ரே பிரவீன் உமேஷ்,
சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன்,
நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன்,
நாமக்கல் காவலர் குமார் ஆகியோர் பெயர்கள் முதலமைச்சர் விருதுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்