Breaking News

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 விஜய் டிவி வெளியிட்ட டீஸர் வீடியோ BIGG BOSS 7

NEWS COVER
0

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 விஜய் டிவி வெளியிட்ட டீஸர் வீடியோ BIGG BOSS 7

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7னின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்



உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ம் வருடம் முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்படுகின்றது அதில் இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி , அசிம்  என பட்டம் வென்றுள்ளார்கள் 

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றார்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் , 

தற்போது அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, பாவனா, மாகபா ஆனந்த், நடிகைகள் உமா ரியாஸ், ரேகா நாயர், கேபிஒய் சரத், தொகுப்பாளர்கள் பாவனா, கோவையின் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

ஏற்கெனவே இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் இப்போது அமெரிக்காவில் இருப்பதாக கூறப்பட்டது.அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததும் நேராக பிக்பாஸ் சீசன் 7லில் தான் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டு வந்தது.


வீடியோ பார்க்க:-

https://twitter.com/vijaytelevision/status/1692531039653028115

Tags: சினிமா