பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார்? இனையத்தை கலக்கும் பட்டியல் இதோ..!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7னின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்
GET NEWS COVER
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ம் வருடம் முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்படுகின்றது அதில் இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி , அசிம் என பட்டம் வென்றுள்ளார்கள்
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றார்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் ,
தற்போது அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, பாவனா, மாகபா ஆனந்த், நடிகைகள் உமா ரியாஸ், ரேகா நாயர், கேபிஒய் சரத், தொகுப்பாளர்கள் பாவனா, கோவையின் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
ஏற்கெனவே இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் இப்போது அமெரிக்காவில் இருப்பதாக கூறப்பட்டது.அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததும் நேராக பிக்பாஸ் சீசன் 7லில் தான் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டு வந்தது.
பிக்பாஸ் சீசன் அக்டோபர் 8 ஆம் தேதி நிகழ்ச்சி தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அதேபோல் இந்த சீசன் மொத்தம் 105 நாட்களுக்கு நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்று கூறப்படும் 18 பேர் கொண்ட பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா.நடிகர் அப்பாஸ்,நடிகை தர்ஷா குப்தா,நடிகை அம்மு அபிராமி,வி.ஜே ரக்சன்,ஜாக்லின்,காக்கா முட்டை விக்னேஷ்,ஸ்ரீதர் மாஸ்டர்,மாடல் ரவி குமார்.மாடல் நிலா,நடிகை ரச்சிதா கணவர் தினேஷ்,ரேகா நாயர்,சந்தோஷ் பிரதாப்செய்தி வாசிப்பாளர் ,ரஞ்சித்,பப்லு,அகில்,சோனியா அகர்வால்,வி.ஜே. பார்வதி, ஆகியோர் கலந்து கொள்வார்கள் என இந்த பட்டியல் தற்போது சமூக கவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் ஆரம்பித்தால் மட்டுமே யார் யார் கலந்து கொள்வார்கள் முழு தகவல்கள் கிடைக்கும்
Tags: சினிமா