Breaking News

உலகக்கோப்பை கிரிக்கெட் 9 போட்டிகளின் தேதி மாற்றம்..! புதிய அட்டவணை வெளியீடு..!

NEWS COVER
0

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.


இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9 போட்டிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதுஅக்டோபர் மாதம் 15ஆம் தேதியில் அகமதாபாத்தில் நடைபெற இருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை போட்டி அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக அக்டோபர் 14 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது .

அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற இருந்த ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான போட்டி அக்டோபர் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது .

அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற இருந்த நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் வைத்து அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது . 

அக்டோபர் 10ஆம் தேதி பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருந்தது தற்போது பகல் போட்டியாக மாற்றப்பட்டிருக்கிறது. 

 நவம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியும் 

ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் நவம்பர் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கின்றன . 

நவம்பர் 12ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நவம்பர் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது .

மாற்றப்பட்ட புதிய அட்டவணை

அக்டோபர் 10 – இங்கிலாந்து vs வங்கதேசம்

அக்டோபர் 10 – பாகிஸ்தான் (எ) இலங்கை

அக்டோபர் 12 – ஆஸ்திரேலியா (எ) தென் ஆப்பிரிக்கா

அக்டோபர் 13 – நியூசிலாந்து (எ) வங்கதேசம்

அக்டோபர் 14 – இந்தியா (எ) பாகிஸ்தான்

அக்டோபர் 15– இங்கிலாந்து (எ) ஆப்கானிஸ்தான்

நவம்பர் 11– ஆஸ்திரேலியா (எ) வங்கதேசம்

நவம்பர் 11– பாகிஸ்தான் (எ) இங்கிலாந்து

நவம்பர் 12 – இந்தியா (எ) நெதர்லாந்து

Tags: விளையாட்டு செய்திகள்