Breaking News

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் வேலை வாய்ப்பு முழு விவரம்

NEWS COVER
0

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் குலசேகரன்பட்டினம் திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் வேலை வாய்ப்பு அறிவிப்பு -நாள் 10.07.2023

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் கீழே குறிப்பிடப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்ய இந்து மதத்தினை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து நிபந்தனைகளுக்குட்பட்டு 11.08.2023 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




இரவு காவலர் முதன்மை &உபகோயில்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

பகல் காவலர் முதன்மை உபகோயில் 

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

மின் பணியாளர் முதன்மை & உபகோயில்

1.ITI அரசு அங்கீகரிக்கப்பட்ட அல்லது அரசால் நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருத்தல்

2. மின் உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட 'பி' சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்

அலுவலக உதவியாளர் முதன்மை கோயில்

8 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி அரசு

1. விண்ணப்பதாரர்கள் 2023 ஜீலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும் 45 வயதுபூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.இதர விவரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளவேண்டும்

2 விண்ணப்பங்கள் திருக்கோவில் அலுவலத்தில் நேரிலோ அல்லது https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் என்கிற பெயரில் உள்ள பக்கத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயல் அலுவலர், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம், என்ற முகவரிக்கு 11.08.2023 அன்று மாலை 5.45க்குள் கிடைத்திடும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் விளம்பர அறிவிப்பினில் குறிப்பிட்ட கடைசி தேதிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள், விண்ணப்பத்தில் உரிய பட்டியலில் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், கோரப்பட்ட சான்றுகள் இணைக்கப்படாமல் வரப்பெறும் விண்ணப்பங்கள்,எடுத்துக் கொள்ளப்படமட்டாது.நிராகரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு:-

https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/38272/1948/document_1.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்