Breaking News

பைக்கில் லடாக் பயணம் செய்யும் ராகுல் காந்தி வைரல் வீடியோ

NEWS COVER
0

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக லே மற்றும் லடாக் பகுதிக்கு சென்றுள்ளார்

காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு லடாக் பகுதிக்கு ராகுல் முதன்முறையாக சென்றுள்ளார். அங்கு பாங்காக் ஏரி பகுதி வரை மோட்டார் சைக்கிளில் ராகுல் பயணம் மேற்கொண்டார்


ராகுல் காந்தியின் மோட்டார் சைக்கிள் பயணம் குறித்த புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.

என் தந்தை கூறியதுபோல், பேங்காங் ஏரிக்கு செல்லும் வழியில் உலகின் மிக அழகமான இடங்களில் இதுவும் ஒன்று" என்று தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும், ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்டு 20ம் தேதி பேங்காங் ஏரியில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

வீடியோ பார்க்க:

https://twitter.com/INCIndia/status/1692811222024937608/video/1

Tags: அரசியல் செய்திகள்