தேசிய திரைப்பட விருதுகள் யார் யாருக்கு என்ன விருதுகள் முழு விவரம்
தேசிய திரைப்பட விருதுகள், ஒவ்வொரு வருடமும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி வருகிறது.
2021-ம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இதில் முதலில் ஸ்பெஷல் ஜூரி விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படம் சிறந்த பிராந்திய மொழியில் படத்திற்கான விருதை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் நல்லாண்டிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி விவசாயி படத்தில் நடித்த 83 வயது முதியவர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது கடைசி விவசாயி
சிறந்த மலையாள படம் - ஹோம்
சிறந்த தெலுங்கு படம் - உப்பென்னா
சிறந்த கன்னட படம் - 777 சார்லி
சிறந்த பாடகர் - காலபைரவா (நாட்டு நாட்டு பாடல்)
சிறந்த நடிகை - ஆலியா பட் (கங்குபாய் கத்தியவாடி) மற்றும் கீர்த்தி சனோன் (மிமி)
ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு 7 தேசிய விருதுகள்
சிறந்த ஸ்டண்ட் - கிங் சாலமன்
சிறந்த நடனம் - பிரேம் ரக்ஷித்
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ஸ்ரீனிவாஸ் மோகன்
சிறந்த இசையமைப்பாளார் - கீரவாணி
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - ஆர்.ஆர்.ஆர்
பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலை பாடிய பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
புஷ்பா திரைப்படத்திற்க்கு 2 விருது
புஷ்பா படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
அதேபோல் அப்படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறந்த படம் மாதவன் இயக்கி, தயாரித்து நடித்த ராக்கெட்ரி திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.
Tags: சினிமா