Breaking News

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்!! வார விடுமுறை இல்லை

NEWS COVER
0

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்!! வார விடுமுறை இல்லை என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.



சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுமார் 2500 க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தினந்தோறும் இந்த உயிரியல் பூங்காவிற்கு 4000 மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். 

அதே சமயம் உயிரியல் பூங்காவை பராமரிக்கும் பணிகளுக்காக வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்வர்.இந்நிலையில் இன்று ஓணம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படுகிறது. இன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் அதிகளவிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்