Breaking News

பல்நோக்கு சேவை பணிக்கு மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

NEWS COVER
0

பல்நோக்கு சேவை பணிக்கு மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



செங்கல்பட்டு மாவட்டத்தில் மீனவ கிராமங்களைச் சேர்ந்தோர், பல்நோக்கு சேவை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களான குன்றுக்காடு, கொக்கிலமேடு, புதுநெம்மேலி, நெம்மேலிகுப்பம், புதுகல்பாக்கம், சூளேரிகாட்டுக்குப்பம், படூர் ஆகிய ஏழு மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில், காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்கள், ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. 

விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.மேற்படி மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்போருக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். 

35 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம் 15,000 ரூபாய் வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள், வரும் செப்., 12ம் தேதி மாலை 5:00 மணிக்குள், சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு, விண்ணப்பித்தை அனுப்ப வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு, adfmnkpm@gmail.com என்ற இ - மெயிலிலும் 98401 56196 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்