Breaking News

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

NEWS COVER
0

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.


GET NEWS COVER

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

2001 முதல் 2006 வரை அதிமுகவில் அமைச்சராக இருந்தவர் அன்வர் ராஜா. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கட்சி விதிகளை மீறியதாகவும், கட்சியின் மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும் கூறி அன்வர் ராஜா கட்சியில் இருந்து கடந்த 2021 டிசம்பர் மாதம் நீக்கப்பட்டார்.அப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இந்த நடவடிக்கையை எடுத்தனர். 

 கடந்த ஆண்டு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆங்கில ஊடகங்களுக்கு அன்வர் ராஜா பேட்டியளித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துகளையும் முன்வைத்து வந்தார்.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து செல்பவர்கள் மன்னிப்புக்கடிதம் கொடுத்தால் அவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் அன்வர் ராஜா இணைந்தார். 

சென்னை பசுமைவழிச்சலையிலுள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு அன்வர் ராஜா சென்றுள்ளார். அங்கு அவரை சந்தித்துப் பேசி, அதிமுகவில் இணைந்தார். அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் அன்வர் ராஜா மீண்டும் இணைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள்