எனது கணவர் மரணம் பற்றி வதந்தி பரப்பாதீர்கள்! நடிகை ஸ்ருதி வேண்டுகோள்! வீடியோ இணைப்பு
சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகபிரியாவின் கணவர் அரவிந்த கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், தனது கணவர் மரணம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ஸ்ருதி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
சன்டிவியின் நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பரியா. கடந்தாண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது வென்றிருந்தார்.
திருமணத்திற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்த ஸ்ருதி திருமணத்திற்கு பின் சீரியலில் இருந்து முழுவதுமாக விலகினார் இந்நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில்
எனது கணவர் அரவிந்த் மரணத்திற்கு ஆறுதல் கூறும் விதமாக பலர் நேரில் வந்தும், போன் மூலமாகவும், மெசேஜ் செய்தும் ஆறுதல் கூறியதற்கு நன்றி. அரவிந்த் என்னோடு தான் இருக்கிறார் எப்போதும் எங்களோடு தான் இருப்பார். வீட்டில் பல சமர்தாயங்கள் இருந்தாலும் இந்த வீடியோவை நான் ஏன் போட்டுள்ளேன் என்பதை முதலில் கூறி விடுகிறேன்.
உண்மையில் அரவிந்துக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியாதவர்கள் இதை ஒரு தகவலாக கூட எடுத்து கொள்ளலாம். ஆனால் உண்மை என்ன என்பதே தெரியாமல் சில யூடியூப் சேனல்கள், பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
அவருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார். ஆனால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது இறந்து விட்டார். அவரின் மரணத்திற்கு காரணம் இது அது என கூறுகிறார்கள் ஆனால் அப்படி வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை.
அவர் ஒரு சிவில் இன்ஜினியர், பேஷனுக்காக தான் பாடி பில்டராக இருந்தார். இப்படி வெளியாகும் தவறான தகவல்களால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தயவு செய்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார் .
A kind request to all the YouTube channels, News Chanels and media. Pls stop spreading rumours and don’t hurt us please. We’re trying to overcome an extremely difficult situation and giving strength to elders. Your news videos for likes and views that is going to fetch you money will definitely devastate us by the unwanted fake info that you’re posting . So watch out before u post any irrelevant content in ur channels. It’s giving us more pain and agony in this situation. Thank you for understanding. 🙏
Arvind is always next to us.
And my real gratitude for my friends and family who took major efforts to give me strength at this time with your Condolences . Your love keeps us alive. Thank u from the bottom of my heart.
வீடியோ பார்க்க:-
https://www.instagram.com/p/CvhAtHAMW9B/
Tags: தமிழக செய்திகள்