Breaking News

இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் ஆதார் ஏடிஎம் வசதி தமிழ்நாடு அரசு திட்டம்

NEWS COVER
0

தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்களில் ஆதார் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



அதன்படி, இ சேவை மையங்களை டிஜிட்டல் வரம்பிற்குள் கொண்டுவந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இ-சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

.தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக பகுதிகளிலும், கிராமபுற பகுதிகளிலும் தமிழக அரசின் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இ-சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் வரும் இந்த வசதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்