செங்கல்பட்டு அருகே கல்பாக்கத்தில் ஆம்லெட் சாப்பிடுவதில் தகராறு மைத்துனரை கொலை செய்த மாமன் கைது
கல்பாக்கம் அருகே, மது அருந்தும் போது சைடிஷ் ஆம்லெட்டை யார் சாப்பிடுவது என்ற தகராறில் மைத்துனர் செல்லப்பன் என்பவரை அடித்தே கொன்ற மாமன் முருகனை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ,உய்யாலிகுப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் இவருக்கு வயது 30 அதே பகுதியைச் சேர்ந்த அவரது மாமன் முருகன் இவருக்கு வயது 32
இருவரும் நேற்று இரவு புதுப்பட்டினம் ஈசிஆர் சாலையில் தாங்கள் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஆம்லெட் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகன் ஆத்திரத்தில் செல்லப்பனை கட்டையால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து அங்கேயே விழுந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் போலிசாருக்கு தகவல் அளிக்க சம்பவ இடம் வந்த கல்பாக்கம் போலீசார். 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் செல்லப்பனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டார் என கூறியதை அடுத்து உடலை கைப்பற்றிய கல்பாக்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்