அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு - கோவை இன்டெர்சிட்டி ரயில், கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு மாற்றாக இந்த ரயில் கோவை வரை நீட்டிப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்தனர்.
ஆனால் அதற்கு மாற்றாக இந்த ரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டது. அந்த ரயிலை இப்போது ராமேஸ்வரம் நீட்டிக்க போவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.tnஇந்நிலையில் திருவனந்தபுரம் - மதுரை இடையே இயங்கும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்வதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்