விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நடிகர் விஜய் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் இந்த கூட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags: சினிமா தமிழக செய்திகள்