உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த நடிகர் ரஜினிகாந்த் வீடியோ
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த நடிகர் ரஜினிகாந்த் வீடியோ
நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது
திரைப்படம் ரிலீசுக்கு முன் இமயமலை சென்ற ரஜினிகாந்த் அதன் பின் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்றார்.அங்கு ஜார்க்கண்ட் ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மாளிகைக்கே நேரில் சென்று சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று உத்தரப்பிரதேசத்துக்கு சென்றார் ரஜினிகாந்த். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கப்போவதாக கூறினார்.
இதனால் எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், ரஜினியுடன் ஜெயிலர் படத்தை பார்க்க யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை என்று தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக ரஜினிகாந்துடன் உபி துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா திரைப்படத்தை பார்த்தார்.
அதன்பின்பு தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு சென்றார். காரில் இருந்து கீழே இறங்கிய ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/AswinTvm3/status/1692920745855516754
Tags: அரசியல் செய்திகள் சினிமா