சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் ஜெயிலர் பட திரை விமர்சனம் ! JAILER movie review
நடிகர்கள்;-
ரஜினி
மோகன்லால்,
சிவராஜ்குமார்
பிரியங்கா மோகன்,
ரம்யா கிருஷ்ணன்,
யோகிபாபு,
வசந்த் ரவி,
விநாயகன் ,
சுனில்,
தமன்னா,
விநாயகன்,
இசை:-
அனிருத்
இயக்கம்:-
செல்சன்
தயாரிப்பு:-
சன் பிக்சர்ஸ்
கதை:-
ஓய்வு பெற்ற ஜெயிலர் ரஜினிகாந்த் தன் மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன், வசந்த் ரவி ,மருமகள், பேரன் என குடும்பத்தினருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
காவல்துறை உதவி ஆணையரான வசந்த் ரவி தமிழகத்தில் சிலைக்கடத்தல் கும்பல் முக்கியக் குற்றவாளியைக் குறித்து விசாரணையை நடத்துகிறார். ஆனால், விசாரணை துவங்கிய சில நாள்களிலேயே அர்ஜுன் காணாமல் போகிறார்.
காவல்துறை அதிகாரியான தன் மகனைக் காணவில்லை என உயர் அதிகாரிகளை நாடுகிறார் முத்துவேல் பாண்டியன். அப்போது, சிலைக்கடத்தல் தொடர்பாக காணாமல் போன அதிகாரிகள் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் உங்கள் மகன் இறந்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். மேலும் ரம்யா கிருஷ்ணன் அவன் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம் என்கிறார்.
விரக்தியில் இருக்கும் முத்துவேல் தன் மகனைக் கொன்றதாக சந்தேகப்பட்ட குற்றவாளியைக் கொல்கிறார். ஆனால், முக்கியக் குற்றவாளியான விநாயகன் முத்துவேல் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கின்றார்
காணாமல் போன மகன் என்ன ஆனான்? மகனுக்காக வில்லனை தேடிச் செல்லும் முத்துவேல் பாண்டியன் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார்? என்கிற மீதிக்கதை
Tags: சினிமா