Breaking News

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இசிஜி டெக்னிசியன் பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.

NEWS COVER
0

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள இசிஜி டெக்னிசியன் பணிக்கு 95 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


GET NEWS COVER

வயது வரம்பு:-

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயது வரையும், முன்னாள் படை வீரர்கள் என்றால் 50 வயது வரையும் தளர்வு அளிக்கப்படுகிறது. கணவரை இழந்த பெண்கள் என்றால் 59 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

கல்விதகுதி:-

இசிஜி டெக்னிசியன் மற்றும் லேப் டெக்னிசியன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பு முடித்து ஓராண்டு சான்றிதழ் படிப்பை எலக்ட்ரோ கார்டியோகிராம் அல்லது டிரட்மில் டெக்னீசியன் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:-

இசிஜி டெக்னிசியன் பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500ம், அதிகபட்சமாக ரூ.62,000 வரையும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க:-

விருப்பம் உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு:-

https://www.mrb.tn.gov.in/pdf/2023/notification_ECG_2023.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்