Breaking News

மத்திய அரசுப் பணி தேர்வு அட்டவணை வெளியீடு.

NEWS COVER
0

மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.


GET NEWS COVER

அந்த வகையில் நடப்பாண்டு நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சிஜிஎல் எனப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான இரண்டாம் நிலை தேர்வு அக். 25, 26, 27-ம் தேதிகளிலும், 

சிஎச்எஸ்எல் எனப்படும் ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி அளவிலான இரண்டாம் நிலை தேர்வு நவ. 2-ம் தேதியும், 

இளநிலை பொறியாளர்களுக்கான தேர்வு டிச.4-ம் தேதியும், மத்திய ஆயுதப் படைக்கான தேர்வு டிச. 22-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in/ என்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தை அணுகலாம் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: தேசிய செய்திகள்