மாவட்ட சுகாதார சங்கத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட இருக்கும் பல் மருத்துவ மையங்களில் கீழ்கண்ட பதவிகளுக்கும் மற்றும் திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 29.09.2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
விருதுநகர்மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர்/பல்மருத்துவ உதவியாளர்/திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி:- பல் மறுத்துவ உதவியாளர் Dental Assistant
10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் (Programe Cum Administrative Assistant)
ஏதேனும் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எம்எஸ் ஆபிஸ் மென்பொருள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
அலுவலக மேலாண்மை பணிகளில் ஓராண்டு முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்
நிபந்தனைகள்:-
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம்,துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் வாளகம்,விருதுநகர் மாவட்டம்-626001.
இதர விவரங்கள்-
1. விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (SpeedPost) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன
2. விண்ணப்ப படிவங்கள் https://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் வட்டார சுகாதார நிலைங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்
3. இதற்கான, மின்னஞ்சல் முகவரி vnrnhm@gmail.com
4. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
5.திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர்(Program, cum Administrative Assistants) பதவிக்கு வயது வரம்பு 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/09/2023091729.pdf
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்