நின்றிருந்த லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி விபத்து நடந்த சிசிடிவி வீடியோ
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாயில் சின்ன கவுண்டனூர் பகுதி அருகே, நன்கு முனை சந்திப்பில் ஒரு சரக்கு லாரி நின்று கொண்டு இருந்துள்ளது.
அப்போது அந்த வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன் ஓன்று நின்று கொண்டிருந்த லாரி மீது வந்த வேகத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி, பிரியா ஒரு வயது குழந்தை சஞ்சனா ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்tஹனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது காரில் பயணித்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் இருப்பதை கண்டு, அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள்