தந்தை எஸ்.ஏ சந்திரசேகரை சந்தித்த நடிகர் விஜய்..வைரலாகும் புகைப்படம்
NEWS COVER
0
தந்தை எஸ்.ஏ சந்திரசேகரை சந்தித்த நடிகர் விஜய்..வைரலாகும் புகைப்படம்
விஜய் தற்போது தான் தளபதி 68 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய கையோடு விஜய் தன் தாய் மற்றும் தந்தையை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களுக்கு சர்ஜரி நடைபெற்றதாக அவரே கூறியிருந்தார். இந்நிலையில் விஜய் நேற்று தன் தாய் தந்தையினரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
விஜய் மக்கள் இயக்க பிரச்னையில் நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமீபகாலமாக தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: சினிமா