Breaking News

நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைபடம் எப்படி இருக்கு திரை விமர்சனம்

NEWS COVER
0

நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைபடம் எப்படி இருக்கு திரை விமர்சனம்

ஷாருக்கான்

நயன்தாரா

விஜய் சேதுபதி 

தீபிகா படுகோன், 

சஞ்சய் தத் 

பிரியாமணி, 

சன்யா மல்ஹோத்ரா

யோகி பாபு

இயக்கம்:-

அட்லி

இசை:-

அனிருத்


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான அட்லீ, ராஜா ராணி, மெர்சல், தெறி,பிகில் என மாஸ் ஹிட் திரைப்படங்களுக்கு அடுத்து ஹிந்தியில் ஜவான் திரைப்படத்தை எடுத்துள்ளார்

கதை:-

விக்ரம் ரத்தோர் என்கிற ராணுவ வீரர், தன் படையினருடன் தீவிரவாதிகளுடன் போரிடும்போது அனைவரின் துப்பாக்கிகளும் செயலிழக்கின்றன. இதனால், சண்டையில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகின்றனர். இதற்குக் காரணம், இந்திய ராணுவத்திற்கு துப்பாக்கிகளை அனுப்பும் விஜய் சேதுபதி நிறுவனத்தின் முறைகேடுதான் எனக் கண்டுபிடிக்கிறார்கள். அதன்பின்பு விஜய் சேதுபதி உரிமம் கேன்சல் ஆகின்றது

அதன்பின்பு விக்ரம் ரத்தோரை தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுகிறார். அவரின் மனைவியான தீபிகா தன் கணவரைக் கொல்ல வந்தவரைக் கொன்று விட்டு, ஜெயிலுக்கு செல்ல அங்கு அவருக்கு குழந்தைப் பிறக்கிறது. 

அந்த குழந்தைக்கு அப்பாவின் அருமை பெருமை எல்லாம் சொல்லி, அவன் வளர்ந்து பெரியவனானதும் அப்பா தேசத்துரோகி இல்லை என நிரூபிக்க வேண்டும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு இறக்கிறார். 

குழந்தை வளர்ந்து பெண்கள் சிறையில் ஜெயிலராக இருக்கும் ஆசாத் ரத்தோர் (ஷாருக்கான்), ஆறு பேர் கொண்ட பெண் கைதிகள் படையுடன் மெட்ரோ ரயிலைக் கடத்துவது, அமைச்சரைக் கடத்துவது என இவரின் செயல்களைத் தடுக்க காவல் அதிகாரியான நர்மதா (நயன்தாரா) போராடுகிறார். ஆசாத் ஏன் இப்படியான செயல்களைச் செய்கிறார், அம்மாவின் சத்தியத்தைக் காப்பாற்றுகிறானா? என்பது திரைக்கதை

Tags: சினிமா