Breaking News

நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை!

NEWS COVER
0

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஷால் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தற்போது லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தை வெளிளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளது. 



ஏற்கனவே, லைக்கா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் ரூ.21.29 கோடி கொடுக்கப்படவேண்டி இருந்த நிலையில், அதில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த தனி நீதிபதி முன்னதாக உத்தரவிட்டிருந்தார். 

இதனையடுத்து, இன்னும் அந்த தொகையை விஷால் செலுத்தாத காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் லைக்கா முறையீட்டுள்ளது.

இதன் அடிப்படையில், லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது. 

அது மட்டுமின்றி, உயர்நீதிமன்ற உத்தரவுகளை இன்னும் விஷால் அமல்படுத்தவில்லை என்ற காரணத்தால் வரும் செப்.12-ல் நேரில் ஆஜராகவும் உத்தரவிடபட்டுள்ளது.

Tags: சினிமா