விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் சில்க் வேடத்தில் நடித்த நடிகை யார் தெரியுமா?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செப்டம்பர் 15 ல் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி சுனில், செல்வராகவன், ஒய்.ஜி. மகேந்திரன்போன்ற முக்கிய நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியாகி 80,90,ஸ் களை உசுப்பேத்தி உள்ளது என்றே கூறலாம்
ஆல் திரையுலக ரசிகர்களால் இன்றும் மறக்கமுடியாது நடிகையாக வளம் வருபவர் சில்க் ஸ்மிதா. மார்க் ஆண்டனி படத்தின் டிரெய்லரில் ஒரு ஐட்டம் பாடல் ஒன்றும் இருக்கின்றது. அந்த பாடலில் ஆடியிருப்பது சில்க் மாதிரியே இருக்கும் ஒரு நடிகை. ஆம் பார்ப்பதற்கு அச்சு அசலாக சில்க் மாதிரியே இருக்கிறார்.
யார் அந்த புது சிலக்:-
மார்க் ஆண்டனி"யில் சில்க் ஸ்மிதாவை போல் நடித்து இருப்பது பிரபல இன்ஸ்டா மாடல் விஷ்ணுபிரியா தான் .இவர் ஆந்திராவை சேர்ந்தவர். சமூக வலைதளத்தில் சில்க்கின் மறுபிறவியாக பார்க்கப்படும் இவர் சில்க் சம்மந்தமான பல வீடியோகளை போட்டு சமூக வலைத்தகத்தில் பிரபலமடைந்தார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய விஷ்ணுபிரியா எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும் எனக்கு இந்த அளவிற்கு ஆதரவாக இருந்த விஷால் சாருக்கும் எஸ் ஜே சூர்யா சாருக்கும் மிகவும் நன்றி.-இது என்னுடைய முதல் படம் முதல் படத்திலேயே இப்படி இரண்டு லெஜன்ட் உடன் நடிப்பேன் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை ஏதோ சும்மா சமூக வலைதளத்தில் வீடியோ பண்ணிக் கொண்டே இருந்தேன் அது என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
டிரைலர் வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=Dg8X7SZ_4bs
Tags: சினிமா