Breaking News

இந்த மாதம் 1,000 எப்போது வரவு வைக்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு.

NEWS COVER
0

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு இம்மாதம் ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். 

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, ரூ.1,000 தொகை, இம்மாதம் 14 ஆம் தேதியே, அதாவது ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இம்மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாகவே பயனாளர்களுக்கு வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்