எதிர்நீச்சலில் ஆதி குணசேகரனாக நடிப்பது யார் தெரியுமா?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க நடிகர் வேல ராமமூர்த்தி கமிட் ஆகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது
மாரிமுத்து இவர் திரைப்பட இயக்குனரும் நடிகருமாவார். இவர் ககண்ணும் கண்ணும் (2008) படத்தில் இயக்குநராக அறிமுகமான பிறகு , புலிவால் (2014) படத்தை இயக்கினார் மேலும் தமிழ் சினிமாவில் நடிகராக துணை வேடங்களில் நடித்துவருகிறார். மேலும் சின்னதிரையில் சீரியலில் சண்டீவியில் எதிர் நீச்சல் தொடரில் நடித்து பிரபலமாகினார் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையையும், அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காண்பிப்பது போல இந்த எதிர்நீச்சல் தொடர் அமைந்துள்ளது. இந்த மெகா தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நடித்து வருகிறார்
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 8 ம் தேதி காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்த நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து (56), திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது , அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் எதிர்நீச்சல் தொடரில் அடுத்து ஆதி குணசேகரனாக நடிக்கவிருப்பது யார் என்கிற எதிர்பார்ப்பு சீரியல் ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் நடிகர் வேல ராமமூர்த்தியை ஆதி குணசேகரனாக இறுதி செய்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில தினங்களில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தியை நீங்கள் பார்க்கலாம்.
வேல ராமமூர்த்தி:-
ராமமூர்த்தி பியுசி பட்டதாரி. அவர் இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
மேலும் அவர் ஒரு எழுத்தாளர் பல கதைகள் எழுதியுள்ளார், அவை புத்தகமாகவும் வெளிவந்துள்ளது
மேலும் பல த்மிழ் சினிமாக்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்துள்ளார்
Tags: சினிமா