Breaking News

இந்தியா ஆஸ்திரேலியா போட்டியை காண செல்பவர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!

NEWS COVER
0

இந்தியா ஆஸ்திரேலியா போட்டியை காண செல்பவர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!



சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியை காண செல்பவர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 05ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெறவுள்ள 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். 

இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியை காண செல்பவர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

டிக்கெட் வாங்கிய அனைவரும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக நள்ளிரவு 12 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: விளையாட்டு செய்திகள்