Breaking News

பிக்பாஸ் போட்டியாளருக்கு மஞ்சள் கார்டு கொடுத்த கமல்! யாருக்கு எதற்க்கு தெரியுமா

NEWS COVER
0

பிக்பாஸ் போட்டியாளருக்கு மஞ்சள் கார்டு கொடுத்த கமல்! யாருக்கு எதற்க்கு தெரியுமா



பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ண  விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரதீப் ஆண்டனி என் மீது செருப்பு காலோடு உரசினார். அப்ப நான் கோபப்பட்டு அவருடைய முகத்தில் இடிச்சு இருந்தா, அவரோட முகம் உடைஞ்சு போய் இருக்கும். எனக்கு வெளியில பசங்க நிறைய பேரு இருங்காங்க. என மிரட்டும் விதமாக விஜய் வர்மா பேசி இருந்தார்.

இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் விஜய் வர்மாவுக்கு மஞ்சள் கார்டை கமல்ஹாசன் கொடுத்துள்ளார். 

இந்த கார்டை மூன்று முறைக்கு மேல் வாங்கும் நபர் போட்டியில் வெளியேற்றப்படுவார் என்றும் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.வழக்கமாக, வன்முறையை தூண்டுபவர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்து வந்த நிலையில் இந்த சீசனில் மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

Tags: சினிமா