Breaking News

தமிழகத்தில் டிசம்பர் 16,17 தேதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

NEWS COVER
0
தமிழகத்தில் டிசம்பர் 16,17 தேதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
GET NEWS COVER

தமிழகத்தில் வரும் டிசம்பர் மற்றும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை மிக்ஜாம் புயல் காரணமாக அதிக கனமழையாகப் பெய்து பெரும் சேதம் விளைவித்தது.

 தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மீண்டு வரும் சூழ்நிலையில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: வானிலை செய்திகள்