Breaking News

திருநெல்வேலி− திருச்செந்தூர் ரயில்கள் டிசம்பர் 31 ம் தேதி வரை ரத்து.! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

NEWS COVER
0

திருநெல்வேலி− திருச்செந்தூர் ரயில்கள் டிசம்பர் 31 ம் தேதி வரை ரத்து.!


GET NEWS COVER

 திருநெல்வேலி−திருச்செந்தூர் பயணிகள் ரயில்கள் டிசம்பர் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்

தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையால் செய்துங்கநல்லூா் மற்றும் ஸ்ரீ வைகுண்டம் இடையிலான தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்தது. சேதமடைந்த தண்டவாளங்களை இதனை சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

 எனவே திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே தினமும்இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் டிச.31-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூா் வரை செல்லும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.