மீண்டும் கொரோனா பரவல்! கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா..!
NEWS COVER
0
மீண்டும் கொரோனா பரவல்! கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா..!
GET NEWS COVER
கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது அரசும் காவல் துறையும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர் இந்நிலையில் கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 230 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை நாளொன்றுக்கு 10 பேர் வீதம் கொரானா தொற்று இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை சிகிச்சையில் 949 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தேசிய செய்திகள்