அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா! தமிழக அரசு அறிவிப்பு!
NEWS COVER
0
அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா! தமிழக அரசு அறிவிப்பு!
GET NEWS COVER
தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களான அறுபடை வீடுகளுக்கும் இலவச சுற்றுலா அழைத்து செல்லப்படும் என தமிழக அரசு இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற கோயில் ஊழியர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் உள்ள
திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
திருத்தணி
சுவாமிமலை
பழமுதிர்சோலை
பழனி
உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளுக்கும் மூத்த குடிமக்களை ஒரு தடவை 200 பக்தர்கள் வீதம் ஆண்டுக்கு 5 தடவை மொத்தம் 1000 பக்தர்களை இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்