ஜார்கண்ட் முதல்வர் கைது..! முழு விவரம்.!
NEWS COVER
0
ஜார்கண்ட் முதல்வர் கைது..! முழு விவரம்.!
GET NEWS COVER
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இன்று அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.
நில மோசடி மற்றும் நிலக்கரி சுரங்க முறைகேடு ஆகியவற்றின் பேரில் அவர் மீது சட்டவிரோத பணம் பரிமாற்ற புகார் உள்ள நிலையில் தொடர்ந்து அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி வந்தது.
பல தடவை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் ஆஜராகாமல் இருந்து வந்தார் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இந்நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜரான அவரிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து 6 மணி நேரம் விசாரணை செய்தது. விசாரணை முடிவில் இன்று மாலை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். மேலும் ஆளுநரை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Tags: தேசிய செய்திகள்