Breaking News

அரசுப்பேருந்துகளில் UPI வசதி அறிமுகம்.! முழு விவரம்.

NEWS COVER
0
அரசுப்பேருந்துகளில் UPI வசதி அறிமுகம்.! முழு விவரம்.!
GET NEWS COVER

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயண கட்டணம் செலுத்த UPI வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 அதற்கான கருவிகளும் தற்போது வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பல்லாவரம் பணிமனையை சேர்ந்த நடத்துனர்களுக்கு பயணிகளிடம் UPI வசதி மூலம் பயண கட்டணம் பெறும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 இதில் பயணிகள் ஏறும் இடம் மற்றும் இறங்குமிடம் ஆகியவை குறிப்பிட்டு பயண சீட்டுக்கு பயண கட்டணம் செலுத்தும் வசதி தற்பொழுது சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பயன்பாடு மற்றும் மக்களிடம் உள்ள வரவேற்பு ஆகியவற்றை பொறுத்து இது சென்னையில் உள்ள மற்ற பணிமனைகளுக்கும்  விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

 மேலும் இதில் ஸ்கேனர் மூலமாகவும் பணம் செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதியினை தற்பொழுது மாநகர போக்குவரத்து கழகம்( MTC)  சென்னை மெட்ரோ ரயில்,CMRL மற்றும் தெற்கு ரயில்வே ஆகியவற்றின் சேவைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் மூலம் பெறப்படும் வருவாய் மூன்று துறைக்கும் பகிர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்