"தமிழக வெற்றிக் கழகம்" புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்.! முழு விவரம்.
NEWS COVER
0
தமிழக வெற்றிக் கழகம்" புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்.! முழு விவரம்.
GET NEWS COVER
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். நடிகர் விஜய் எப்போதும் மக்களுக்காக பல நற்பணிகளை தனது ரசிகர்கள் மன்றங்கள் மூலம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கடந்த மாதத்தில் மக்களுக்கு நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கினார்.
மேலும் தனது விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக மாற்றப் போவதாக செய்திகள் வலம் வந்தன விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் இதற்காக டெல்லி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயர் அதிகாரபூர்வமாக நடிகர் விஜயின் X தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் தனது தாய் தந்தைக்குப் பிறகு தனது வெற்றிக்கும் வழி வகுத்த தமிழக மக்களுக்கும் கடைசிவரை உதவிடப் போவதாகவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போது தமிழக வெற்றி கழகம் போட்டியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்