Breaking News

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி உடல் மீட்பு.!

NEWS COVER
0
சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி உடல் மீட்பு.! 
GET NEWS COVER

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

 சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த 4ம் தேதி இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்று விட்டு திரும்பும் வழியில் கார் விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து சட்லஜ் நதியில் விழுந்தது.
 இதில் பயணம் செய்த வெற்றி துரைசாமியின் நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் காரின் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமி பற்றிய தகவல் எதுவும் கிடைக்காமல் இருந்தது. போலீசாரும் மீட்புப் படையினரும் தொடர்ந்து ஆற்றில் மற்றும் சுற்றுப்புற உள்ள நதிக்கரைகளில் தேடுதல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் 8  நாட்களுக்குப் பிறகு இன்று வெற்றி துரைசாமியின் சடலம் சட்லஜ் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. கார் கவிழ்ந்த இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தகவல் தெரிவித்தனர்.

 மேலும் அவரது உடல் தற்பொழுது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்திகள்