"நாடாளுமன்ற தேர்தல் தேதி" தேர்தல் ஆனையம் முக்கிய அறிவிப்பு.!
NEWS COVER
0
நாடாளுமன்ற தேர்தல் தேதி" தேர்தல் ஆனையம் முக்கிய அறிவிப்பு.!
GET NEWS COVER
நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாக வரும் மார்ச் 12 வேட்புமனு தாக்கல் என்றும் ஏப்ரல் 19 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறும் என்றும் மே 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மே 30ஆம் தேதி புதிய அரசாங்கம் பதவியேற்கும் எனவும் ஒரு செய்தி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்து முடிவு செய்வதற்கான ஆலோசனை கூட்டங்கள் இன்னும் முடிவடையாத நிலையில் தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தேர்தல் தேதியை வெளியிடும் எனவும் இதுபோன்று பரவி வரும் பொய் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
Tags: தேசிய செய்திகள்