Breaking News

சால்வை எறிந்த விவகாரம்.! மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவக்குமார்.!

NEWS COVER
0
சால்வை எறிந்த விவகாரம்.! மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவக்குமார்.
GET NEWS COVER

ரசிகர் சால்வை பொருத்த வந்தபோது அதனை பிடுங்கி எறிந்த விவகாரத்தில் நடிகர் சிவகுமார் தற்போது மன்னிப்பு கோரி உள்ளார்.

 காரைக்குடியில் நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். அப்பொழுது நிகழ்ச்சி முடிந்து கிளம்பிய சிவகுமாருக்கு சால்வை போர்த்த முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் சால்வை போட வந்த போது நடிகர் சிவகுமார் அதை கோபத்துடன் பிடுங்கி கீழே வீசி எறிந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. 

ஏற்கனவே ஒரு திறப்பு விழாவில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற போது நடிகர் சிவகுமார் செல்போனை தட்டி விட்டது அப்பொழுது மிகப்பெரும் சர்ச்சையானது. பல்வேறு தரப்பினரும் சிவக்குமாரின் செயலுக்கு அப்போது கண்டனம் தெரிவித்தனர். அதன் பிறகு அவருக்கு புதிய செல்போனையும் வாங்கி கொடுத்து மேற்படி விவகாரத்திற்கு நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

  இந்நிலையில் சிவக்குமார் இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் மேற்படி சால்வை பொருத்த வந்த நபர் தனது  50 ஆண்டுகால நண்பர் கரீம் எனவும் தனக்கு சால்வை போர்த்துவது பிடிக்காது என்று தெரிந்தும் வேண்டுமென்றே சால்வை போர்த்த வந்ததாகவும், அதை உரிமையுடன் தான் பிடுங்கி வீசியதாகவும் தெரிவித்த சிவக்குமார் மேலும் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அதில் பேசியிருந்தார்.

Tags: தமிழக செய்திகள்