Breaking News

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.! முழு விவரம்..!

NEWS COVER
0

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.! முழு விவரம்..!
GET NEWS COVER
 
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வரும்  19.4.2024 அன்று இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என்று நேற்றைய செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டிருந்தது அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடக்கும் தேதியினை அறிவித்தார்.

மக்களவை தேர்தலுடன் சேர்த்து சிக்கிம்,அருணாசல பிரதேசம், ஆந்திரா,தெலுங்கானா,ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது.

 அதன் விவரங்கள் பின்வருமாறு,

மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்திற்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

19.04.2024 தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும்.

வேட்புமனு தாக்கல் துவக்கம் 20.03.2024

வேட்புமனுதாக்கல் கடைசி நாள் 27.03.2024.

வேட்புமனு பரிசீலனை 28.03.2024.


வேட்புமனு திரும்பபெற கடைசி நாள் 30.03.2024.

வாக்குப்பதிவு 19.04.2024

வாக்கு எண்ணிக்கை 04.06.2024

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் 19.4. 2024  அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தேசிய செய்திகள்