Breaking News

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு.!

NEWS COVER
0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு.!

                       

GET NEWS COVER

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி உடன் தேர்வுகள் முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் அனைத்தும் திறக்க தயாராக உள்ள நிலையில் ஜூன் மாதம் 4 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந்நிலையில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் மேலும் ஒரு நாள் மட்டுமே அந்த வாரத்தில் பள்ளிகள் செயல்படும் என்பதாலும் சனி ஞாயிறு விடுமுறை என்பதாலும் ஒட்டுமொத்தமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும் என்று அனைவரும் மத்தியிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையும் இது குறித்து ஆலோசித்து வருகிறது எனவே பள்ளிகள் திறப்பு குறித்த தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்